தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்ற ஈரோடு மாணவி... மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு!
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்ற ஈரோடு மாணவியிக்கு ரயில்
நிலையத்தில் மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் கடந்த 15ம் தேதி இந்திய பள்ளி கல்வித்துறையின் சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஈரோட்டை சேர்ந்த காசி விசாலாட்சி என்ற மாணவி 38 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
போட்டிகள் நிறைவடைந்த நிலையில் மாணவி காசி விசாலாட்சி பஞ்சாப்பில் இருந்து தனது சொந்த ஊரான ஈரோட்டிற்கு ரயில் மூலம் வந்தடைந்தார். ஈரோடு திரும்பிய அவருக்கு ரயில் நிலையத்தில் மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், மாணவிக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பட்டாசுகள் வெடித்ததோடு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.