ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் தேர்திருவிழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!
ஈரோட்டில் பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்களில் பூச்சாட்டுதலுடன்
பொங்கல் மற்றும் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஈரோடு பெரிய மாரியம்மன் மற்றும் வகையறாவைச் சார்ந்த நடு மாரியம்மன்
காரவாய்க்கால் மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோயில்களில் பூச்சாட்டுதலுடன் பொங்கல் மற்றும் குண்டம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இதையும் படியுங்கள் : இன்னும் 2 நாட்களில் தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் - ஆர்சிபி வீரர்கள் சென்னை வருகை!
இந்நிலையில், நடப்பாண்டும் பெரிய மாரியம்மன் நடு மாரியம்மன் ,காரை வாய்க்கால் மாரியம்மன் திருக்கோயில்களில் பூச்சாட்டுகலுடன் பொங்கல் மற்றும் குண்டம் தேர் திருவிழா துவங்கப்பட்டது. பெரிய மாரியம்மன் திருக்கோயில் நடைபெற்ற பூச்சாட்டுதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.இதையடுத்து பக்தர்கள் கொண்டு வந்த மலர்களை அம்மனுக்கு வழங்கினர்.
பூச்சாட்டுதலை முன்னிட்டு கோயில் முழுவதும் மலர்கள் மற்றும் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் வழங்கிய பூக்களால் அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வணங்கி சென்றனர்.