For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Erode | எரியும் குப்பையில் இருந்து கிளம்பிய கரும்புகையால் நடந்த கோர விபத்து - தாய், மகன் பலி!

04:58 PM Nov 11, 2024 IST | Web Editor
 erode   எரியும் குப்பையில் இருந்து கிளம்பிய கரும்புகையால் நடந்த கோர விபத்து   தாய்  மகன் பலி
Advertisement

அந்தியூர் அருகே எரியும் குப்பையில் இருந்து கிளம்பிய கரும்புகையால் நடந்த கோர விபத்தில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே அத்தாணி சவுண்டர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தாயம்மாள் (வயது 59). இவரின் மகள் பூமேஸ்வரன் (வயது 29). இவர்கள் இருவரும்
சொந்த வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் அத்தாணி செம்புலி சாம்பாளையம் பகுதிக்கு சென்றுவிட்டு சவுண்டபூர் நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.

அப்போது செம்புலி சாம் பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் ஓரத்தில் எரிந்த குப்பையில் இருந்து கரும்புகை கிளம்பியது. இந்த கரும்புகையால் எதிரே வந்த பேருந்தை கவனிக்க முடியாமல் இவர்களின் இருசக்கர வாகனம் பேருந்தில் மோதியது.

தாய், மகன் இருவரின் மீதும் பேருந்து ஏறி இறங்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார் இருவரின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தாயும் மகனும் ஒரே சமயத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையின் ஓரத்தில் எரிந்த குப்பையில் இருந்து வந்த கரும்புகையே இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்த நிலையில், சாலைகளின் ஓரங்களில் குப்பைகளை எரிப்பதை தவிர்க்குமாறு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement