ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - முறைகேடு நடப்பதாக நாதக வேட்பாளர் குற்றச்சாட்டு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. இத்தேர்தலில் தி.மு.க.வின் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
காலை முதல் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். தற்போது 3 மணி நிலவரப்படி 53.63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதற்கிடையில் வலையகர வீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பரிதா பேகம் என்பவர் வாக்களிக்க வந்தபோது, ஏற்கனவே அவர் வாக்கு செலுத்தியதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவில் முறைகேடு நடப்பதாக நாதக வேட்பாளர் சீதாலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.