Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Erode கிழக்கு இடைத்தேர்தல் | நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
08:29 PM Jan 19, 2025 IST | Web Editor
Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. திமுக மற்றும் நாதக கட்சிகள் வேட்பாளர் அறிவித்து போட்டியிடுவதாக அறிவித்தனர். 53 வாக்குப்பதிவு மையத்தில் உள்ள 237 வாக்குச்சாவடியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமார் மற்றும் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தமாக 66 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் திமுக, நாதக உட்பட 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் அனுமதி பெறாமல் ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டதாக, 8 பேர் மீதும் BNS-171 பிரிவின் கீழ் ஈரோடு நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement
Next Article