ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 3 மணி நிலவரப்படி 53.63 சதவீத வாக்குகள் பதிவு!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 53.63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
03:40 PM Feb 05, 2025 IST | Web Editor
Advertisement
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. இத்தேர்தலில் தி.மு.க.வின் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.95 சதவீத வாக்குகள் பதிவானது. காலை 11 மணி நிலவரப்படி 26.03 சதவீத வாக்குகள் பதிவானது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
இந்நிலையில் தற்போது 3 மணி நிலவரப்படி 53.63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.