For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஈரோடு இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.
03:46 PM Jan 16, 2025 IST | Web Editor
ஈரோடு இடைத்தேர்தல்   வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்
Advertisement

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 14- ந்தேதி காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது.

Advertisement

இதையடுத்து அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. கடந்த 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் 3 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து 13-ந்தேதி நடந்த வேட்புமனு தாக்கலின்போது 6 பேர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நாளை பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நாளை கடைசி நாள் என்பதால் தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேலும் சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.

தொடர்ந்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். மேலும் அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement