For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா - நடனமாடி அசத்திய மாவட்ட ஆட்சியர்!

03:27 PM Jan 13, 2024 IST | Web Editor
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா   நடனமாடி அசத்திய மாவட்ட ஆட்சியர்
Advertisement

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அலுவலர்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் உற்சாகமாக  நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. 

Advertisement

தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஒவ்வொரு துறையை சேர்ந்த அலுவலக பெண் ஊழியர்கள், இளைஞர்கள் என அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை போன்ற புத்தாடை அணிந்தும் பொங்கல் வைத்தும் விதவிதமான வண்ண கோலமிட்டு அசத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மேளதாளங்களுடன் நடைபெற்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விழாக்கோலம் பூண்டது. மேளத்தால இசைகளுக்கு இணங்க மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அலுவலர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்டு பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினார். பின்னர் அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்று உறியடித்து கலக்கினார்.

அதைத்தொடர்ந்து பெண் அலுவலர்களால் போடப்பட்ட வண்ணக் கோலங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர் விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுப் பொருட்களை வழங்கினார்.

Tags :
Advertisement