Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சி - சரத்குமார் அறிவிப்பு!

03:44 PM Mar 06, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து சமக நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ,

“பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பிப். 28-ம் தேதி என்னை நேரில் சந்தித்து, நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால் நேற்று (05.03.2024| மத்திய அமைச்சர் முருகன், தேசிய செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.ராஜா, பாஜக தமிழக பொறுப்பாளர் மற்றும் தேசியச் செயலாளர் அரவிந்த்மேனன் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்திந்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள். இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கெனவே எனக்கு நாடாளுமன்றத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை வழங்கி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் நாடு வளம் பெற ஒற்றுமையுணர்வு ஓங்கிட மீண்டும் நல்லாட்சி அமைத்திட மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்க பாஜகவுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விபரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன்”

இவ்வாறு அந்த அறிக்கையில் சரத்குமார் குறிப்பிட்டுள்ளார். 

Tags :
BJPElection2024L MuruganLoksabha Elections 2024News7Tamilnews7TamilUpdatesParliament Election 2024SarathkumarSMKTamilNadu
Advertisement
Next Article