“திமுகவுக்கு எதிராக உள்ள ஓட்டுகளை ஒன்றிணைக்க வேண்டும் என இபிஎஸ் பேசியது வரவேற்கதக்கது” - சீமான் பேட்டி!
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “கல்வி என்பது சுகமாக இருக்க வேண்டும். சுமையாக இருக்க கூடாது. மதிப்பெண் வைத்து ஒரு மனிதனை தேர்ந்தெடுப்பது என்பது எப்படி இருக்கும். கல்வியை வியாபரமாக்கிவிட்டு எப்படி சமகல்வியை பற்றி பேசலாம். எத்தனை பிள்ளைகள் பணம் இல்லாமல் கல்வியை இடைநிறுத்துகிறார்கள் என்று நமக்கு தெரியும். சமகல்வி எங்கு இருக்கிறது. வரி இந்த நாட்டில் ஒன்றாக இருக்கிறது. ஆனால், வாழ்க்கை தரம் ஒன்றாக இல்லை.
எல்லாவற்றையும் வியாபரம் ஆக்கிவிட்டு, எப்படி சம உரிமை சமகல்வி என்று வெற்று வார்த்தைகளை பேசுகிறார்கள். இந்த நாட்டில் படிக்கிறவர்கள் எல்லாம் அயல் நாட்டில் வேலை பார்ப்பது தான் கனவாக உள்ளது. மற்ற மேலை நாடுகளில் படிக்கிறவர்கள் இந்தியாவில் வேலை பார்ப்பதற்காக படிப்பது உண்டா?
ஒரே எதிரி திமுக என்றும் திமுகவுக்கு எதிராக உள்ள ஓட்டுகளை ஒன்றிணைக்க வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி பேசியதை நான் வரவேற்கிறேன். எல்லோரும் ஒன்றினைந்தாலும் நான் தனியாக நிற்பேன். எல்லோருக்கும் ஒரு மனநிலை உள்ளது, கூட்டணி இருந்தால் தான் வெள்ள முடியும் என்கிறீர்கள்.
கொள்கை இல்லாமல் வெல்ல முடியாது என்று யாரவது நினைக்கீற்களா?
விஜய் தொப்பி அணிந்து இஃப்தாரில் பங்கேற்றதால் என்னாயிற்று. விலைவாசி ஏறிவிட்டதா? இல்லை மக்களுக்கு ஏதும் பிரச்சனை வந்துவிட்டதா? அதை விடுங்கள். மத்தியில் காங்கிரஸ் - பாஜக இருக்கும் வரை தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனையில் எதுவும் மாறபோவதில்லை”
இவ்வாறு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.