For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“எண்ணூர் மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்!” - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

06:48 PM Dec 16, 2023 IST | Web Editor
“எண்ணூர் மீனவர்களுக்கு ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் ”   பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
Advertisement

மத்திய அரசும், மாநில அரசும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

சென்ணை எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் பாதீக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்த பின்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாகவும், 2016 ஆம் ஆண்டு இதே போன்று நடந்தது. ஆனால் தற்போது இருக்கும் மோசமான நிலை அப்போது கூட கிடையாது. பூண்டி"ஏறி திறக்கும் போது எல்லா எண்ணெய் கழிழுகளையும் திறந்து விட்டதன் விளைவுதான் இது. பழவேற்காடுவரை இந்த எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளது. வானவில் போல கடற்கரை பகுதியில் எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளதை பார்த்த போது கஷ்டமாக உள்ளது.

மத்திய அரசும், மாநில அரசும் 15 நாட்களாக என்ன நடவடிக்கை எடுத்தது. மத்திய மீன்வளத்துறை அமைச்சர் நேரடியாக இங்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும். மாநில மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த பக்கம் கூட வரவில்லை என குற்றம் சாட்டினார்.

பழவேற்காடு வரை 1000 படகுகள் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 ஆயிரம் தரும் முதல்வர் இந்த எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ருபாயாயை மாநில அரசும், மத்திய அரசும் வழங்க வேண்டும். இந்த பகுதியில் நோய் நொடியின்றி வாழ்ந்து வந்த"மக்கள் தற்போது கேன்சரால் பாதிக்கப்பட்டு மருத்துவத்திற்கு"கூட வசதி இல்லாமல் உள்ளனர்.

சிபிசிஎல் நிறுவனம் எண்ணையை திறந்து விடுவதற்கு"யார் அனுமதி கொடுத்தது. ஏற்கனவே புயலால்"பாதிக்கபட்ட மீனவர்களுக்கு"இந்த எண்ணெய் கழிவுகளும் பாதிக்க செய்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அண்ணாமலை மூலமும், தங்களூக்கு தெரிந்த பாஜக தலைவர்கள்"மூலம் இந்த செய்தியை மத்திய அரசிடம் கொண்டு செல்வோம்.

அண்ணா, கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற போது, சீரமைப்பு பணி நடைபெறுவதாக கூறி என்னை திருப்பி அனுப்பினர். ஆனால் பிறந்தநாளுக்காக உதயநிதி சென்றபோது அனுமதிக்கபட்டார். நான் கருணாநிதி பேத்தியாக இருந்திருந்தால் அனுமதித்திருப்பார்கள்.

விஜயகாந்திடம் ஆட்சி இருந்தால் இந்நேரம் வேட்டியை மடிச்சு கட்டிக்கொண்டு கடலுக்குள் இறங்கியிருப்பார். அப்படியான கேப்டனை இழந்தது தமிழக மக்கள். தமிழக அரசு தரும் 6000 ஆயிரத்தில் மிக்ஸி கிரைண்டர் டிவி கூட வாங்க முடியாது. ஒருவாரத்திற்குள் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடைபெறும். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலையிடம் உடனே பேச இருக்கிறேன்.

ஒரு நாள் மழைக்கே சென்னை ஸ்தம்பித்துவிட்டது. ஒரே நாள் மழைக்கே சிங்கார சென்னை நாசமாகிவிட்டது. தேர்தலுக்கு முன் ஒரு நிலைபாடு தேர்தலுக்கு பின் ஒரு"நிலைபாடு என்பதே "திராவிட மாடல். தகுதி பார்த்து 1000 ருபாய் வழங்கியதை போல ஏமாற்று வேலை தான் இந்த"6000 ருபாய் நிவாரணமும். அனைத்து வித வரியையும் கட்டி கூட எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழகத்தில் அனைவரும் வசூல் மன்னர்கள் தான்.

அரசியலில் பெண்ணின் முக்கியத்துவத்தை ஏற்க முடியாமல் என்னை அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கலாம்.
கருணாநிதிக்கு பேனா வைப்பதற்கு காட்டும் முக்கியத்துவத்தை நிவாரணம் கொடுப்பதில் தமிழ்நாடு அரசு காட்ட வேண்டும்.

இவ்வாறு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Tags :
Advertisement