Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எண்ணூர் அனல்மின் நிலைய விபத்து - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

எண்ணூர் அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
07:29 AM Oct 01, 2025 IST | Web Editor
எண்ணூர் அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
Advertisement

சென்னை அருகே எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில், "சென்னையில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்து என்னை மிகவும் வருத்தப்படுத்துகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் பிரதமர் பேரிடர் நிவாரண நிதி (PMNRF) இலிருந்து ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
AccidentEnnoremodiprime ministerthermal power plant
Advertisement
Next Article