For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை!

01:28 PM Dec 12, 2023 IST | Web Editor
சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம்  மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை
Advertisement

சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. 

Advertisement

மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மூழ்கிய நிலையில்,  வடசென்னை பகுதியில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கழிவுகளும் கலந்ததால் முகத்துவார பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன.  மேலும் எண்ணெய் படலங்கள் அருகில் உள்ள குடியிருப்புகளிலும் படர்ந்ததால் வீடுகள் முழுவதும் எண்ணெய் படலமாக காட்சி அளிக்கிறது.

மேலும் கடலில் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் கலந்துள்ளதாக கடலோர காவல்படை நடத்திய ஆய்வில் தெரியவிந்தது.  இதனையடுத்து கடலில் பரவி உள்ள எண்ணெய் கழிவுகள் மேலும் பரவுவதை தடுக்க கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மூலம் ஆயில் ஸ்லிட் டிசால்வன்ட் (ஓ.எஸ்.டி) என்னும் எண்ணெய் கரைப்பானை கடலில் தெளித்தனர்.

இதனிடையே எண்ணெய் கசிவிற்கு யார் காரணம் என கண்டறிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் குழு ஒன்றை நியமித்தது.  இந்த குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  இதனையடுத்து எண்ணெய் கசிவிற்கு யார் காரணம் என அறிக்கை வெளியிட்டுள்ளது.  எண்ணூர் கழிமுகத்தில் எண்ணெய் கசிவு கலந்ததற்கு பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு சிபிசிஎல் நிறுவனமே காரணம் என மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் | “இந்திய சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ, சூப்பர் ஸ்டாரானது எப்படி? 73 வயதிலும் அலப்பறை கிளப்பும் ரகசியம் என்ன?

இதைத் தொடர்ந்து சிபிசிஎல் நிறுவனத்துக்கு மாசு கட்டுபாடு வாரியம் சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

  • பக்கிங்காம் கால்வாயில் உள்ள எண்ணெய் கசிவுகளை சுத்தப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
  • சிபிசிஎல் நிறுவனத்தில் உள்ள அனைத்து குழாய்கள்,  தொட்டிகளில் எந்த ஒரு கசிவுகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

  • தொழிற்சாலையில் இருந்து எண்ணெய் கழிவுகள் மற்றும் மாசுப்பட்ட தண்ணீரை நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி வெளியேற்றினால் தொழிற்சாலையின் செயல்பாடுகள் முடக்கப்படும்.
  • தொழிற்சாலை சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதங்களுக்கு பொறுப்பேற்பதுடன் அதற்கான இழப்பீடுகளை நிறுவனம்தான் வழங்க வேண்டும்.
  • பக்கிங்காம் கால்வாயில் எற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிபிசிஎல் நிறுவனம் இழப்பீடு வழங்கவேண்டும் உள்பட பல்வேறு வழிகாட்டுதலை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ளது.
Tags :
Advertisement