For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பறவைகளை ரசிப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்" - ஆராய்ச்சியாளர்கள் கருத்து!

05:42 PM Jun 10, 2024 IST | Web Editor
 பறவைகளை ரசிப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்    ஆராய்ச்சியாளர்கள் கருத்து
Advertisement

"பறவைகளை ரசிப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்"  என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement

இன்றைய காலகட்டத்தில் உடல் இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் குறைந்து கொண்டிருக்கின்றன.  பலரும் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே வாழ்க்கை முறையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய தலைமுறையினர் கணினி, லேப்டாப் உள்ளிட்ட திரை முன்பு செலவிடும் நேரம் அதிகரித்துள்ளது. வேலை முடிந்த பிறகு ஓய்வு நேரத்தின் பெரும் பகுதியை செல்போன் ஆக்கிரமித்துக்கொள்கிறது. இப்படி திரை முன்பு செலவிடும் நேரம் அதிகரிப்பது மன அழுத்தத்தை உண்டாக்கிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இயற்கையோடு இணைவதும், பறவைகளை கவனிப்பதும் பல்வேறு வகைகளில் மன நலத்துக்கு நன்மைகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பறவைகளை கண்காணிப்பது என்பது உடல் ரீதியான உடற்பயிற்சியை உள்ளடக்கிய ஒரு செயலாக பார்க்கப்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாவது :

"பறவைகளை ரசிக்கும் செயலில் ஈடுபடும்போது மூளையில் ஒரு வகையான இனிமையான உணர்வை அனுபவிக்க முடியும். தொலைநோக்கிகள் மூலமோ அல்லது தொலைநோக்கிகள் இல்லாமலோ பறவைகளை பார்ப்பதும், அவற்றின் ஒலியை கேட்பதன் மூலம் மனதை இலகுவாக்கலாம்.

பொழுதை போக்குவதற்கு செலவிடும் நேரத்தில் பறவைகளைப் பார்ப்பது நல்ல உணர்வுகளை தூண்டக்கூடும். தினமும் ஒரு மணி நேரத்தை பறவை கண்காணிப்புக்கு செலவிடுவது விமானத்தில் பறப்பது போன்ற உணர்வை கொடுக்கும். கவலை, சலிப்பு போன்ற உணர்வுகளை போக்கி மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : பிரசாரத்தில் ராகுல் காந்தி உயர்த்திப் பிடித்த புத்தகம்! அதிகரித்த அரசியலமைப்பு பதிப்பின் விற்பனை!

வெளியே செல்ல முடியாவிட்டாலும் வீட்டின் பால்கனியில் இருந்தபடி பறவைகளை பார்ப்பதும், புதிய காற்றை நுகர்வதும் மனச்சோர்வை குறைக்கும். கவலை, தேவையற்ற வதந்தி, மன அழுத்தம், சிந்தனை ஆகியவற்றைக் குறைக்கும். மேலும், நினைவாற்றல் திறனை மேம்படுத்தும். பறவைகளின் அசைவுகளையும், வடிவங்களையும், நிறங்களையும் ரசித்து பார்ப்பது மன நிறைவை அளிக்கும்"

இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement