தமிழ்நாட்டில் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் - புனித தளங்களில் மக்கள் வழிபாடு!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் புனித தளங்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் 2025-ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவில் வெடி வெடித்து, கேக் வெட்டி, ஆடல் பாடலுடன் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், கடலூர் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இரவு 12 மணிக்கு மணி அடித்ததும் பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து அவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்
அதேபோல், காஞ்சிபுரத்தில் பாகுபாடின்றி அனைவரும் கேக் வெட்டி மகிழ்ந்தனர். மேலும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நள்ளிரவு 01:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. மேலும் புத்தாண்டை வரவேற்க்கும் விதமாக அங்கு குவிந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரியில் வழக்கமாக உற்சாகத்துடன் புத்தாண்டை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர். மேலும் முக்கிய சுற்றுலாத் தளமான கடற்கரை சாலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்களை போலீசார் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதித்தனர்.