Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமெரிக்காவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக அறிவிப்பு - அதிபர் டிரம்ப் உத்தரவு !

ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டார்.
01:25 PM Mar 02, 2025 IST | Web Editor
Advertisement

இந்தியாவை போன்றே அமெரிக்காவிலும் பல்வேறு மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. சில மாநிலங்கள் ஆங்கிலம் மற்றும் பிற பூர்வீக மொழிகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளன. ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தாய்மொழி பேசுபவர்களின் அடிப்படையில் ஸ்பானிஷ், சீனம், பிரஞ்சு, தகலாக் மற்றும் வியட்நாமிய மொழிகள் அங்கு அதிகளவில் பேசப்படுகிறது.

Advertisement

அமெரிக்காவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழி அமெரிக்க ஆங்கிலம் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான். காலபோக்கில் ஆங்கில ஒலிப்பு முறை மற்றும் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டது. இந்தநிலையில், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக ஆங்கிலத்தை மாற்றும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

பெடரல் அரசு நிர்வாகம் மற்றும் அரசிடம் நிதி பெறும் அமைப்புகள், பிற மொழி பேசுபவர்களுக்கு உரிய மொழிபெயர்ப்பு உதவிகளை வழங்க வேண்டும் என 90 கால கட்டத்தில் இருந்த அதிபர் கிளிண்டன் பிறப்பித்த உத்தரவு இதன்மூலம் நீக்கப்படுகிறது. இனி, மொழிபெயர்ப்பு உதவி வழங்குவது அந்தந்த அமைப்புகள் முடிவுக்கு உட்பட்டது. அமெரிக்காவில் 350க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. ஆனாலும் வெள்ளை மாளிகை ஆவணங்களில் எப்போதும் ஆங்கிலம் மட்டுமே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
AmericaDeclaredEnglishofficial languageOrdersPresident TrumpUnited States
Advertisement
Next Article