For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இங்கிலாந்து சுற்றுப்பயணம் - ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமனம்!

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய U-19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.
07:05 PM May 22, 2025 IST | Web Editor
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய U-19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம்   ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமனம்
Advertisement

இங்கிலாந்து அணிக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் 19 வயதுக்குட்டவர்களான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி அணியின் கேப்டனாக சென்னை அணியின் ஆயுஷ் மாத்ரே இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இவர் ஓப்பனராக சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.

Advertisement

அதே போல் ராஜஸ்தான் அணியில் உள்ள 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷியும்
இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். இவரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பிரமாதமாக விளையாடி அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

U-19 இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒரு 50 ஓவர் பயிற்சி ஆட்டம்,  5 ஒருநாள் போட்டிகள், 2 மல்டி டே போட்டி ஆகிய தொடர்களில் விளையாட உள்ளது. இத்தொடர் வருகிற ஜுன் மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஜூலை 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அணி விவரம் :

ஆயுஷ் மாத்ரே (C), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சௌதா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (VC&WK), ஹர்வன்ஷ் சிங், ஆர்.எஸ்.அம்பிரிஷ், கனிஷ்க் சௌகான், கிலன் படேல், ஹெனில் படேல், யுதஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, முகமது எனான், ஆதித்யா ராணா, அன்மோன்ஜீத் சிங்.

Tags :
Advertisement