Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல” - அமைச்சர் ரகுபதி பேட்டி!

அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.
06:00 PM Mar 17, 2025 IST | Web Editor
அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.
Advertisement

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்தித்தார்.

Advertisement

அப்போது அவர் பேசுகையில்,  “பாஜகவினர் போராட்டம் குறித்து அமலாக்கத்துறை சொன்ன ஊழல் குறித்தும்  அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவான கருத்தை தெரிவித்துள்ளதார். திமுகவுக்கு எதிராக பாஜகவினர் செய்யும் சூழ்ச்சி இது.  மத்திய அரசு கொடுக்க வேண்டிய பட்ஜெட் நிதியை தமிழ்நாட்டிற்கு கொடுக்க மறுக்கிறது ஏன்?

பாஜக அரசுக்கு தழிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் மீது அக்கறை இல்லை. திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் எந்த ஒரு ஊழல்கள் பற்றியும் குற்றச்சாட்டுகள் பாஜக தரப்பில் சொல்ல முடியாது . திமுகவிற்கு மடியில்
கனமில்லை, மனதில் பயமும் இல்லை.

அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல!. உதாரணத்திற்கு நமது தமிழ்நாடு மாவட்டத்திலேயே அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்து வந்த கந்தித் திவார் என்பவர் நமது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்படவில்லையா? இதே அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்த நபர் கையும் காலமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கைகளும் மேற்கொண்டது நமது தமிழ்நாடு போலீசார் தான்” என்று கூறினார்.

டாஸ்மாக்கில் ரூ1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சமீபத்தில் கூறியது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, அப்படி தவறுகள் நடக்கவில்லை என கூறினார். இந்த விவகாரத்தில் பாஜகவினர் இன்று(மார்ச்17) திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
BJPDMKEDMinister regupathyTASMAC
Advertisement
Next Article