For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முன்னாள் #cricket வீரர் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன்! - ஏன் தெரியுமா?

03:00 PM Oct 03, 2024 IST | Web Editor
முன்னாள்  cricket வீரர் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன்    ஏன் தெரியுமா
Advertisement

முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீனுக்கு பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

Advertisement

ஹைதராபாத் கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த முறைகேடு குறித்த விசாரணை மேற்கொள்ள ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை அமலாக்கத் துறை அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் ரூ.20 கோடி நிதியை முறைகேடாக கையாண்டது தொடர்பாக தெலுங்கானா ஊழல் தடுப்புப் பிரிவு மொத்தம் மூன்று முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதையடுத்து இந்த விவகாரத்தில் கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்காக 99 டெஸ்ட் மற்றும் 334 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அசாருதீன் விளையாடி உள்ளார். மொத்தமாக 15593 ரன்கள் குவித்துள்ளார். மூன்று முறை உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தி உள்ளார். 61 வயதான அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார். இந்தச் சூழலில் தான் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க பண மோசடி விவகாரத்தில் முதல் முறையாக அவருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. கிரிக்கெட் மற்றும் அரசியல் களம் என இரண்டிலும் இது கவனம் பெற்றுள்ளது.

Tags :
Advertisement