Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!

04:06 PM Dec 02, 2023 IST | Web Editor
Advertisement

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்கத்துறை  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததுள்ளது. 

Advertisement

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங்குக்கு எதிராக சனிக்கிழமை அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக,  பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சஞ்சய் சிங்கின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்:  கூகுள் மேப்ஸ் செயலியின் முன்னாள் வடிவமைப்பாளர் அதிருப்தி!

அதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங் அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.  தொழிலதிபர் தினேஷ் அரோரா ரூ.2 கோடியை மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கின் வீட்டில் வைத்து அவரிடம் கொடுத்தார் என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.  சஞ்சய் சிங் இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளார்.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு பிறகு,  மதுபானக் கொள்கை ஊழல் வழக்குடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் 2-வது முக்கிய தலைவர் சஞ்சய் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Aam aadmiAam Aadmi MpCharge SheetEnforcement Directoratenews7 tamilNews7 Tamil UpdatesSanjay Singh
Advertisement
Next Article