4 நாட்களாக இருட்டறையில் பூட்டப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்! எதற்காக தெரியுமா?
அலுவலகத்தில் ஆபாச படம் பார்த்த தனியார் நிறுவன ஊழியரை 4 நாட்களுக்கு இருட்டறையில் பூட்டி வைத்து தண்டனை வழங்கியுள்ளனர்.
பொதுவாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தங்களது அலுவலகத்தின் வேலையை சரியாக செய்யாத போது அல்லது, அலுவலக நேரத்தில் வேறு வேலைகளில் ஈடுபடுவது மற்றும் அலுவலக நேரத்தை வீணடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நிறுவனம் நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்வது வழக்கம்.
சீனாவில் உள்ள Guangzhou Duoyi Network Co Ltd என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவர் அலுவலக நேரத்தில் வேலை செய்யாமல், தொடர்ச்சியாக தனது சொந்த வேலையில் ஈடுபட்டிருந்து தெரியவந்துள்ளது. மேலும், அந்த ஊழியர் அலுவலகத்தில் ஆபாச படங்களை பார்பது தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. இது நிறுவனத்தின் முதலாளிக்கு தெரியவந்ததை அடுத்து, அந்த ஊழியரை அழைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் 2022ம் ஆண்டிலிருந்து சரியாக வேலை செய்யாமல் இருந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள் : அயோத்தி கோயிலுக்கு அழைத்து செல்வதாகக் கூறி போலி விமான டிக்கெட்: 100 பேரிடம் நூதன மோசடி!
இதையடுத்து, நாள்தோறும் அலுவலகத்திற்கு வரும் அந்த ஊழியரை தனி இருட்டு அறையில் அடைத்து வைத்து, அலுவலக நேரம் முடிந்த பின்னர் திறந்துவிட்டனர். இது போல தொடர்ந்து நான்கு நாட்களுக்கு செய்துள்ளனர். பின்னர், அந்த ஊழியரின் மனைவி இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பினரிடமும் கருத்துகளை கேட்டு நீதிபதி, அந்த நிறுவனத்தின் ஊழியர் மீது தவறு இருப்பதாக கூறி அவருக்கு ரூ. 43 லட்சம் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டார். மேலும், அந்த ஊழியரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.