For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Open AI மீது வழக்குத் தொடர்ந்த எலான் மஸ்க்: காரணம் தெரியுமா?

09:47 PM Mar 01, 2024 IST | Web Editor
open ai மீது வழக்குத் தொடர்ந்த எலான் மஸ்க்  காரணம் தெரியுமா
Advertisement

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Advertisement

கடமையிலிருந்து நழுவுதல், ஒப்பந்த மீறல் மற்றும் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து லாபத்தை அதிகரிக்க பாகுபாடான வணிக நடவடிக்கைகளில் ஓபன்ஏஐ ஈடுபட்டு வருவதாக எலான் வழக்கு ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார். ஓபன் ஏஐ உருவாக்கப்பட்ட நோக்கத்துக்கு மாறாக பயணிப்பதாக எலான், தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

ஓபன்ஏஐ கடந்த ஆண்டு வெளியிட்ட சாட் ஜிபிடி பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் 3.5-வது வெர்சன் வரை பயனர்களுக்கு இலவச சேவையை அனுமதித்த ஓபன்ஏஐ சாட் ஜிபிடி-4 வெர்சனுக்கு கட்டணம் வசூலித்து வருகிறது. இந்தியாவில் 1,650 பேர் கட்டணச் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் மற்றுமொரு கதையும் குறிப்பிடப்படுகிறது.

எலான் மஸ்க் ஓபன்ஏஐ நிறுவனத்தை டெஸ்லாவுடன் இணைக்க முயன்றதாகவும் ஆல்ட்மேன் உள்பட நிர்வாக குழு உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகே ஆல்ட்மேன் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.

Tags :
Advertisement