டிஸ்னியின் தலைமை பொறுப்பில் எலான் மஸ்க்? ஏப்ரல் 1 நகைச்சுவை என பகிர்ந்து வரும் நெட்டிசன்கள்!
எலான் மஸ்க், டிஸ்னியின் நிறுவனத்தின் தலைமை DEI அதிகாரியாக சேரப் போவதாகப் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் எலான் மஸ்க் தான் விட்ட இடத்தை மீண்டும் கைப்பற்றினார். இந்த ஆண்டு வரை அதனை தக்கவும் வைத்துக்கொண்டார். அண்மையில், பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கை பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார்.
Excited to join @Disney as their Chief DEI Officer.
Can’t wait to work with Bob Iger & Kathleen Kennedy to make their content MORE woke!
Even the linguini.
— Elon Musk (@elonmusk) April 1, 2024
இந்நிலையில், டிஸ்னி நிறுவனத்தின் வணிக பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்க (DEI) திட்டங்களின் வடிவமைப்பாளராக சேரவுள்ளதாக தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், “டிஸ்னியின் தலைமை DEI அதிகாரியாக சேர்வதில் மகிழ்ச்சி. பாப் இகர் & கேத்லீன் கென்னடியுடன் இணைந்து அவர்களை மேலும் விழிப்படையச் செய்ய ஆர்வமாக உள்ளேன்” என பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், எலோன் மஸ்க் தங்கள் நிறுவனத்தில் இணைவது பற்றி எதையும் டிஸ்னி நிறுவனம் பகிரவில்லை என்பதாலும், டெஸ்லா CEO இன் X பற்றிய இடுகை ஏப்ரல் 1 அன்று பகிரப்பட்டதாலும், பலர் இது ஒரு நகைச்சுவை என பகிர்ந்து வருகின்றனர்.
Sorry guys, posted this from the wrong account
— Elon Musk (Parody) (@ElonMuskAOC) April 1, 2024
மேலும் இதற்கு எலான் மஸ்க்கின் பகடி கணக்கிலிருந்து, “மன்னிக்கவும் நண்பர்களே, இது தவறான கணக்கிலிருந்து பதிவிடப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது. மஸ்க் இதற்கு சிரிக்கும் குறியீட்டை பதிலாக பதிவிட்டுள்ளார்.