Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து வெளியேறுவதாக, எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
10:50 AM May 29, 2025 IST | Web Editor
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து வெளியேறுவதாக, எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
Advertisement

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 'டாட்ஜ்' என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவன அதிபருமான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார். தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் விதமாக பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்.

Advertisement

அரசு ஊழியர்கள் பணியை விட்டு நீக்குதல், அரசு செலவுகளைக் குறைத்தல் உள்ளிட்டவற்றில் மஸ்க் தலைமையிலான 'டாட்ஜ்' துறை தீவிரமாக ஈடுபட்டது. இதனால் அரசுக்கு ஒருநாள் செலவில் இருந்து ரூ.34 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டது. எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின் இதுவரை அரசின் செலவுகளில் 10 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து வெளியேறுவதாக, எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சிறப்பு அரசு ஊழியராக எனது திட்டமிடப்பட்ட காலம் முடிவடையும் நிலையில், வீண் செலவுகளைக் குறைப்பதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
administrationAmericaannounceselon muskPresident Trump
Advertisement
Next Article