Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்... அகழிகள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!

05:25 PM Dec 18, 2024 IST | Web Editor
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து மா, தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. சேதத்திற்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வ.புதுப்பட்டியில் தென்னை, மா, வாழை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே இப்பகுதியில் சிறிது காலங்களாகவே யானைகள் அட்டகாசம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வ.புதுப்பட்டி மூலக்காடு பகுதியில் உள்ள ரமா மற்றும் முரளி ஆகியோரின் 15 ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் கம்பி வேலியை பிடிங்கி எறிந்துவிட்டு கூட்டமாக நுழைந்த காட்டு யானைகள், தென்னை, மா, வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. இதில் 20க்கும் மேற்பட்ட மாமரங்களும், 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

மாங்காய் சீசன் தொடங்க உள்ள நிலையில் காட்டு யானைகளின் இத்தகைய செயல்களால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நுழைந்த காட்டு யானைகள், இதேபோல் பெரும்
சேதத்தை ஏற்படுத்தியதாகவும், மீண்டும் நேற்று இரவு கூட்டமாக வந்த யானைகள்
விளை நிலங்களுக்குள் புகுந்து முற்றிலும் சேதத்தை ஏற்படுத்தியதால் பெரும் நஷ்டத்தை
தாங்கள் சந்தித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

காட்டு யானைகள் விவசாய நிலத்திற்குள் நுழையாமல் இருக்க, வனத்துறையினர் நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் மலை அடிவாரப் பகுதிகளில் அகழிகள் மற்றும் சோலார் மின் வேளிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
coconutDamageMango TreesSrivilliputhurWild elephants
Advertisement
Next Article