Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கருப்புப் பெட்டி” - ராகுல் காந்தி!

01:17 PM Jun 16, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு கருப்புப் பெட்டி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பல குற்றச்சாட்டுகள் எழுந்து வரும்நிலையில், அவை ஒரு கருப்புப் பெட்டி என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,

“நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கவலைகள் எழுப்பப்படுகின்றன.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்புப் பெட்டி. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை ஆராய யாரையும் அனுமதிக்கப்படுவதில்லை. நிறுவனங்கள் பொறுப்புக் கூறல் இல்லாதபோது ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும், அவற்றை அகற்ற வேண்டும் என எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
black boxCongressEVMRahul gandhi
Advertisement
Next Article