Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயராது - அதிகாரிகள் விளக்கம்

09:01 AM Jun 12, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயராது எனவும் சமூக வலைதளங்களில் தவறான தகவல் வெளியாகி உள்ளதாகவும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கடந்த 2022ம் ஆண்டு மின் சார கட்டணம் உயர்த்தப் பட்ட நிலையில்,  கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.கஸ்டாலினின் உத்தரவு காரணமாக மின்சார கட்டணம் உயர்த் தப்படவில்லை.  நடப்பு ஆண்டும் மின்சார கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கும்,  வாரியத் துக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சார கட்டணத்தையும் உயர்த்தினால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கருதுகின்றனர்

இதற்கிடையே தமிழ்நாட்டில் மீண்டும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.  இந்த நிலையில், மீண்டும் மின்சார கட்ட ணம் உயர்த்தப்பட்டதாக பரவும் தகவல் வதந்தி எனவும்,  கடந்த 2022-ம் ஆண்டு ஜூலையில் உயர்த்தப்பட்ட மின்சார கட்டண உயர்வு அட்டவணைதான் தற்போது சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  தற்போது வரை மின்சார கட்டணம் உயர்த்துவது குறித்து தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் எந்த முடிவும் எடுக்கவில்லை.  இதனை பொதுமக்கள் நம்ப வேண்டியதில்லை முற்றிலுமாக நிராகரிக்கலாம் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
மின்கட்டணம்Electricity Boardtamil naduTN Govt
Advertisement
Next Article