For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் மின் விநியோகம் முழுமையாக சீராகாதது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

09:03 PM Dec 05, 2023 IST | Web Editor
சென்னையில் மின் விநியோகம் முழுமையாக சீராகாதது ஏன்  அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
Advertisement

சென்னையில் மின் விநியோகம் முழுமையாக சீராகாதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, அசாதாரண சூழலை புரிந்துகொண்டு மின் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம், ஈரப்பதம் நிலவுவதால் மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் படிப்படியாக மின் விநியோகம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொது மக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் மின் விநியோகம் வழங்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் அசாதாரண சூழலை புரிந்துகொண்டு மின் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க மின்சார வாரியம் முழுமூச்சுடன் பணியாற்றி வருகிறது. சென்னையில் மொத்தமுள்ள 1,812 மின்னூட்டிகளில் 1,610 மின்னூட்டிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மின்னூட்டிகளை சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பட்டினப்பாக்கம், புளியந்தோப்பு, பின்னி மில், நேரு ஸ்டேடியம், தாமோதரன் தெரு, முத்தமிழ் நகர், கொளத்தூர் பாலாஜி நகர், சாத்தாங்காடு, மீஞ்சூர், கல் மண்டபம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, முடிச்சூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் மழை நீர் தேக்கம் இருப்பதால் மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்ப்ட்டுள்ளார்.

Advertisement