For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே மின்சார ரயில் சேவை தொடக்கம்!

03:51 PM May 03, 2024 IST | Jeni
சென்னை கடற்கரை   திருவண்ணாமலை இடையே மின்சார ரயில் சேவை தொடக்கம்
Advertisement

சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் சேவை தொடங்கியுள்ளது. 

Advertisement

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு தினமும் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த மின்சார ரெயில் பாஸ்ட் மின்சார ரயில் ஆகும்.  சென்னை கடற்கரையில் மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில்,  வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு இரவு 9.35 மணிக்கு சென்றடைகிறது.

இந்த நிலையில்,  பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில் சென்னை கடற்கரை - வேலூர் கன்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டு வரும் மெமு ரெயில் (06033/06034) மே 2-ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது.

இதனிடையே,  நேற்று அதிகாலை முதல் இயக்கப்படவிருந்த சென்னை கடற்கரை - திருவண்ணாமலை மின்சார ரயில் சேவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.  இந்த நிலையில்,  திருவண்ணாமலை மற்றும் சென்னை கடற்கரை இடையிலான ரயில் சேவை இன்று (மே. 3) தொடங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் மின்சார ரயில் போளூர்,  மடிமங்கலம்,  ஆரணி ரோடு,  சேடராம்பட்டு,  ஒன்னுபுரம்,  கண்ணமங்கலம், பெண்ணத்தூர் ரயில் நிலையங்களில் நின்று வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்துக்கு 5.40 மணியளவில் வந்து சேரும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வேலூரில் இருந்து 6 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு வழக்கம் போல் காலை 9.50 மணிக்கு வந்து சேரும்.  பின்னர் சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது.  தினசரி இயக்கப்படும் மின்சார ரயிலுக்கான கட்டணம் ரூ. 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement