Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தூத்துக்குடி மின்சார கார் உற்பத்தி நிறுவனம்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி!

04:11 PM Jul 12, 2024 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நடைபெற்றது. இதில் வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பில் முன்னணி வகிக்கும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்ந்து, தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீட்டில் புதிதாக அமையவுள்ள மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு கடந்த பிப். 25-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொழிற்சாலையை அமைக்க, தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியுள்ளது. முதல் கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இதில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவைகள் அமைய உள்ளன.

இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் ஆட்டோ ஹப் மற்றும் இந்தியாவின் EV தலைநகரமாக தமிழ்நாடு வலுப்பெறும் என்றும் கூறப்படுகிறது.

Tags :
CMO TamilNaduFactoryMK StalinNews7Tamilnews7TamilUpdatessipcotTN GovtTuticorinvinfast
Advertisement
Next Article