For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பேருந்து கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

02:28 PM Jul 17, 2024 IST | Web Editor
பேருந்து கட்டணம் உயர்வா  அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
Advertisement

பேருந்து கட்டணம் உயர்வு குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் நாகர்கோவில், மைசூர்,சக்தி ,கோவை,
தேனி, திருநெல்வேலி போன்ற 15 வழித்தடத்தில் புதிய பேருந்துகளை தொடங்கி வைக்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும்
மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தமிழ்நாடு காங்கிரஸ்
கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி
வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:

"மின் கட்டணம் உயர்வு தொடர்ந்து பேருந்து கட்டணம் உயர்வு குறித்து எதிர்கட்சிகள் புகாருக்கு, அவர்கள் விருப்பம் அதுவாக இருந்தால் அதற்கு பதில் கூற
தயாராக இல்லை.  கோவை பகுதியில் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்குவதால் விபத்துகள் நிகழ்வது குறித்து கோவை போக்குவரத்துத்துறை ஆணையர் சார்பில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்ட உள்ளது.

அதிமுக ஆட்சியில் 3 ஆண்டுகளுக்குள் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு
ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவு செய்யாத நிலையில் கூட திமுக தலைமையிலான அரசு
அமைந்தவுடன் 3 சுற்றுகளில் 5 சதவீத ஊதிய உயர்வுடன் போக்குவரத்து தொழிலாளர்கள்
ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டது. ஊதிய ஒப்பந்தம்
குறித்து பேச்சுவார்த்தை அடுத்த நடத்த வேண்டிய ஒன்று அதற்கான பணிகள் நடைபெற்று
வருகிறது.

போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 688 பேருக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பணியாணை வழங்கப்பட்டது. மற்ற காலி பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கி உள்ளது. விரைவில்  காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஒய்வு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்கப்பட்டுள்ளது, தற்போது வழங்கப்பட்ட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள் கணக்கில் கொள்ளப்பட்டு வருகிறது. சிஎன்ஜி பேருந்து பராமரிப்பு 8 பேருந்துகள் பரீட்சார்த்த முறையில் துவங்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்த முறை முடிந்து அது குறித்து ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்சார பேருந்துகள்
500 பேருந்துகள் வாங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில் முதல் கட்டமாக 100மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் வெளியிடப்பட்டது.

இதையும் படியுங்கள் : தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 50-75% இடஒதுக்கீடு: மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!

சென்னையில் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். மினி பேருந்துகள் குறித்து வரைவு அறிக்கை மீதான பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. ஜூலை 22ம் தேதி கால அவகாசம் உள்ள நிலையில் 22ம் தேதி உள்துறை செயலாளர் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளார். அதன் பிறகு முழு அறிக்கை தயார் செய்து முதல்வர் ஒப்புதல் பெறப்பட்டு புதிய வழித்தடத்தில் மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆம்னி பேருந்துகள் கட்டணம் யாராலும் நடைமுறைப்படுத்தும் விஷ்யம் இல்லை, ஒவ்வொரு முறையும் ஆம்னி பேருந்துகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆம்னி சங்கத்தில் இல்லாதவர்கள் கட்டணம் அதிகமாக பெறுகிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். கடந்த அதிமுக ஆட்சியில் 2000 பேருந்துவழித்தடத்தில் திமுக
ஆட்சியில் 800 வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன விரைவில் மற்ற
வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன நடவடிக்கை எடுக்கப்படும்.

பேருந்து கட்டண உயர்வு குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement