For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களவைத் தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

04:07 PM Mar 16, 2024 IST | Web Editor
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களவைத் தேர்தல்   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
Advertisement

சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களவைத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.

Advertisement

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  இதற்காக விக்யான் பவனில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்,  தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார்,  எஸ்.எஸ்.சாந்து ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதையும் படியுங்கள் : “மக்களவைத்தேர்தல் – தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 வாக்குப்பதிவு” – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கூறியதாவது :

“உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இது.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இது.  தேர்தலை திருவிழா போன்று நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தேர்தல் திருவிழாவில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். நாட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இதுவரை 800 மாவட்ட ஆட்சியர்களுடன் நேரடியாக பேசி உள்ளேன். ஒட்டுமொத்தமாக 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். இவர்களுக்கு வசதியாக 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட இருக்கின்றன.  தேர்தலில் 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. 1.82 கோடி முதன் முறை வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். சுமார் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.

மொத்த வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேர் உள்ளனர். இவர்களில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் உடலில் 40 சதவீதத்துக்கு மேல் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து,மாநில எல்லைகள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும். பெரிய நெட்வொர்க் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. cVigil என்ற செயலி மூலம் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காகித தாள்கள் மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும்"

இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.

Tags :
Advertisement