For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேர்தல் vs தொழில்நுட்பம் | 2008 அமெரிக்க தேர்தல் : அனல் பறந்த முதல் யூடியூப் பிரச்சாரம்!

03:20 PM Feb 27, 2024 IST | Web Editor
தேர்தல் vs தொழில்நுட்பம்    2008 அமெரிக்க தேர்தல்   அனல் பறந்த முதல் யூடியூப் பிரச்சாரம்
Advertisement

தேர்தலில் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை தொடராக பார்த்து வருகிறோம். அந்த வகையில் யூடியூப் தளம் தொடங்கப்பட்ட பின் 2008 அமெரிக்க தேர்தல் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

1994ல் இன்டெர்நெட், 1996ல் ecommerce , 1998ல் கூகுள் 2004ல் பேஸ்புக் என அமெரிக்க அதிபர் தேர்தல்கள் கொஞ்சம் கொஞ்சமாக தொழில்நுட்பத்தை தனக்குள் சுவீகரித்துக் கொண்டன. புதிய தொழில்நுட்பங்கள் வரும்போதெல்லாம் அதனை அமெரிக்க சமூகமும், அரசியல் கட்சிகளும் தங்களுக்கு ஏற்றவாறு மிக எளிமையாக கையாண்டனர்.

தற்போது கூகுளின் அல்ஃபபட் நிறுனத்திற்கு சொந்தமான  யூடியூப்  கடந்த 2005ல் தான் முதன்முதலாக உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. அதுவரை இணையதள போஸ்டர்கள், கட்டுரைகள், வலைப்பதிவுகள் மற்றும் தேர்தல் கணிப்புகள் என சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வந்தன. இதனைத் தொடர்ந்து வந்த யூடியூப்பையும் அமெரிக்க அரசியல்வாதிகள் கனகச்சிதமாக பயன்படுத்தி அதன் பலனை தேர்தலில் அறுவடை செய்தனர்.

Youtube-ம் முதல் யூடியூபரும் :

யூடியூப் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தொடங்கப்பட்டது. இதனை  பேபால் நிறுவனத்தில் பணியாற்றிய மூன்று முன்னாள் ஊழியர்களான ஸ்டீவ் சென் , சாட் ஹர்லி மற்றும் ஜாவேத் கரீம் ஆகியோர் உருவாக்கினர்.  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் புருனோவை தலைமையிடமாகக் கொண்டு  செயல்பட்ட இந்த நிறுவனம் பின்னாளில் கூகுளின் அல்ஃபபெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. அக்டோபர் 2006 இல், யூடியூப்பை கூகுள் 1.65 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலைக்கு  வாங்கியது

ஜாவித் கரீம் :

அமெரிக்க மென்பொருள் பொறியாளர் மற்றும் இணைய தொழில்முனைவோரான ஜாவேத் கரீம் YouTube இன் இணை நிறுவனர்களில் ஒருவராவார். யூடியூப் தளத்தை வடிவமைத்த பிறகு இவர் தனக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் தனது முதல் வீடியோவைவும் பதிவு செய்தார்.  இதன் மூலம் யூடியூபிலேயே முதல் வீடியோவை பதிவேற்றிய முதல் நபர் என்கிற பெருமையை பெருகிறார்.  ஏப்ரல் 23, 2005 அன்று இவர்  பதிவேற்றிய " Me at the zoo ",  வீடியோ மிகவும் பிரபலமானது.  பிப்ரவரி, 2024 நிலவரப்படி இந்த வீடீயோ 309 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

My Space யூடியூப் சேனலும் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரமும்

மைஸ்பேஸ் என்பது அமெரிக்காவில் பிரபலமாக அறியப்பட்ட ஒரு சமூக வலைதளமாகும்.  மை ஸ்பேஸ் நிறுவனம் புதிதாக ஒரு  யூடியூப் சேனலை ஆரம்பித்து அதற்கு இம்பாக்ட் சேனல் என பெயரிட்டது. இந்த சேனலில் 10 அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் சுயவிவரங்களுக்கான இணைப்புகளை வெளியிட்டது.

அமெரிக்க தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியதும் மைஸ்பேஸ் சேனலில் 2007 டிசம்பரில் மட்டும் 60 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை ஈர்த்தது. அதேபோல உலகளவில் சுமார் 90 மில்லியன் பேர் சப்கிரைஸ்கர்களாக இணைந்தனர்.  தேர்தல் நேரம் என்பதால் அரசியல் தளத்தில் இந்த சேனல் மிகவும் பிரபலமாக அறியப்பட்டது.

மைஸ்பேஸின் யூடியூபை பார்வையிடும் பார்வையாளர்கள் அதிகமானோர் பதின் வயதுடையோர் மற்றும் 30வயதுக்கும் குறைவானோராக இருந்தனர். இதனால் அமெரிக்க அரசியல்வாதிகள் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் யூடியூபை உபயோக்கிக்கவும் அதன்மூலம் அவர்களை கவரவும் கவனம் செலுத்தினர்.

ஜனநாயகக் கட்சியின் வேர்பாளார்களான ஹிலாரி ரோதம் கிளிண்டன்,  பராக் ஒபாமா, ஜான் எட்வர்ட்ஸ் மற்றும் நியூ மெக்சிகோ கவர்னர் பில் ரிச்சர்ட்சன் ஆகியோர் தங்களது கொள்கை திட்டங்கள் மற்றும் நிலைப்பாடுகளை அறிவிக்க தங்களுக்க் மைஸ்பேஸ் யூடியூப் சேனலை பயன்படுத்தினர். இதேபோல தங்களுக்கென தனிச் சேனலையும் உருவாக்கி அதன் மூலமும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

மைஸ்பேசஸ் சேனலின் மிக முக்கியமான சிறப்பம்சமே இந்த சேனல் தான் அமெரிக்க அதிபர் தேர்தல் முக்கிய நிகழ்வாக கருதப்படும் அதிபர் வேட்பாளர்களின் விவாதங்களை(Presidential Debate) முதன் முதலில் யூடியூப்பில் ஒளிபரப்பியது. இதேபோல தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் மற்றும் அதிபர் வேட்பாளர்கள் நிதி திரட்டுவதற்கான Fund Rising tools போன்ற இணையதள இணைப்புகளை மைஸ்பேஸின் இம்பாக்ட் சேனல் ஏற்படுத்தியிருந்தது.

கல்லூரி வளாகங்களில்  நடைபெறும் முன்னணியில் உள்ள அதிபர் வேட்பாளர்கள் விவாதங்கள், அவர்கள்  அமெரிக்காவின் இளைஞர்களுடன்  மேற்கொள்ளும் உரையாடல்களை  MTV உடன் இணைந்து மைஸ்பேஸ் வெளியிட்டது. 2008 ஆம் ஆண்டில், MyDebates.org என்ற புதிய இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் இந்த விவாதங்களை வெளியிட்ட முதல் தளம் மைஸ்பேஸ் ஆகும். இது அமெரிக்க அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

-அகமது AQ

Tags :
Advertisement