For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் வயநாடு தொகுதியில் பின்னடைவு... 244வது தேர்தலிலும் தோல்வி!

02:20 PM Nov 23, 2024 IST | Web Editor
‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் வயநாடு தொகுதியில் பின்னடைவு    244வது தேர்தலிலும் தோல்வி
Advertisement

‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் 244வது முறையாக தேர்தலில் தோல்வியை தழுவும் தருணத்தில் உள்ளார்.

Advertisement

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி என இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார்.  தேர்தல் முடிவுகளில் போட்டியிட்ட இரண்டு தொகுதியிலும் வெற்றியும் பெற்றார். இதனையடுத்து எந்த தொகுதியில் எம்பியாக தொடர்வார் என கேள்வியும் எழுந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைத்த ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் எம்பியாக தொடர உள்ளதாகவும், வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்து ராஜினாமா செய்தார்.

மேலும் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டார். பிரியங்கா காந்தி உட்பட 16 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இதில் பிரியங்கா காந்தி 6 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி 2 லட்சம் வாக்குகளும், பாஜகவைச் சேர்ந்த நவ்யா ஹரிதாஸ் 1 லட்சம் வாக்குகள் பெற்றும் அடுத்தடுத்து முன்னிலையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ‘தேர்தல் மன்னன்’ 253 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.

யார் இந்த பத்மராஜன்?

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள ராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் டயர் கடை உரிமையாளரான பத்மராஜன். 1959ஆம் ஆண்டு ஆத்தூரில் பிறந்த இவர் தனது 30 வயதில் தொடங்கி தற்போது வரை இந்தியாவில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார். குறிப்பாக 34 ஆண்டுகளில் 6 குடியரசுத் தலைவர், 6 துணை குடியரசுத் தலைவர், 5 பிரதமர் தேர்தல் உட்பட 243 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.

வயநாடு தேர்தல் உட்பட இதுவரை 244 தேர்தல்களில் எந்தவித கட்சியையும் சாராமல் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளார். இப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா, கருணாநிதி, எடப்பாடி பழனிசாமி உட்பட்ட 11 முதலமைச்சர்களை எதிர்த்து போட்டியிட்டு உள்ளார்.

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் லிமியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் பத்மராஜனின் பெயர் இடம் பெற்றுள்ளது. 34 ஆண்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக கூறுகிறார். டயர் கடை வைத்துள்ள இவரை தேர்தல் மன்னன் பத்மராஜன் என்று அனைவரும் அழைக்கின்றனர். ஜனநாயக இந்தியாவில் தேர்தலில் யார் வேண்டுமானாலும், யாரை எதிர்த்து வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும், விழிப்புணர்வுக்காக மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement