Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பிப். 27-ல் தேர்தல்!

05:09 PM Jan 29, 2024 IST | Web Editor
Advertisement
15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியுள்ளன.  மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன.

இந்த நிலையில், கர்நாடகா,  ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான், ஒடிஸா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம்,  பீகார்,  மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத்,  சத்தீஸ்கர், ஹரியாணா, மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப். 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்.8-ம் தேதி வெளியிடப்படும்.  வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்.15.  வேட்புமனு பரிசீலனை பிப்.16-ம் தேதி நடைபெறும்.  வேட்பாளர்கள் பிப்.20-ம் தேதி வரை வேட்புமனுவை திரும்பப்பெறலாம்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
#Electionsமாநிலங்களவை தேர்தல்இந்திய தேர்தல் ஆணையம்ELECTION COMMISSION OF INDIARajya sabha
Advertisement
Next Article