Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு தேர்தல்! தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவு!

07:44 PM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கோவை மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்த குமார் கடந்த 3ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரைத் தொடர்ந்து நெல்லை மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவியை ராஜினாமா செய்வதாக இருவரும் தெரிவித்தனர்.

இதனை அடுத்து நெல்லை, கோவை மேயர் பதிவிகள் நிரப்பப்படாமல் காலியாக இருந்தன. இந்நிலையில், நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மேயர்களை தேர்வு செய்ய மாநகராட்சி கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கான மேயர் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதியும், கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மேயர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தற்போது காலியாக உள்ள திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்பிடும் பொருட்டு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி, மேயர்களைத் தேர்ந்தெடுத்திட உரிய அறிவுரைகளை தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

மேலும், ஆணையத்திற்கு ஏற்கனவே அறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்ட ஏனைய நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள காலி பதவியிடங்களுக்கும் சேர்த்து மறைமுக தேர்தல்கள் நடத்துவதற்கான கூட்டங்களை நடத்தி அப்பதவியிடங்களை நிரப்பிட உரிய அறிவுரைகளை சம்மந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
covaimayor electionNellaiTNSEC
Advertisement
Next Article