Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

05:20 PM Apr 07, 2024 IST | Web Editor
Advertisement

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

Advertisement

இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல்  நடைபெறவுள்ளது.  மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.  ஆந்திராவில் மே 13-இல் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து சட்ட மன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது.

இதனிடையே சமீபத்தில் தேர்தல் பரப்புரையின் போது ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு,  முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சர்ச்சைக்குறிய வார்த்தையால் விமர்சித்ததாக இந்திய தேர்தல் ஆணையம் சந்திரபாபு நாயுடுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு குறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்ததாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.   இதனையடுத்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் தனது நிலைப்பாட்டை சமர்ப்பிக்குமாறு ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

Tags :
andra pradeshElection commissionELECTION COMMISSION OF INDIAElection2024Elections with News7 tamilElections2024Jagan Mohan Reddy
Advertisement
Next Article