தேர்தல் கூட்டணி | பிரேமலதா விஜயகாந்துக்கு அதிகாரம்...!
மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதா விஜயகாந்துக்கு அதிகாரம் என தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் இடையே கூட்டணி நிலைப்பாடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டன.
இந்நிலையில் தற்போது மறைந்த விஜயகாந்த் கட்சியான தேமுதிக இந்த தேர்தலை எவ்வாறு கையாள போகிறது என கேள்விகள் இருந்த நிலையில் கூட்டணி குறித்த ஆலோசனையை தற்போது உள்ள தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா தலைமையில் இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்றது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமயில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதா விஜயகாந்துக்கு அதிகாரம் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.