For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காட்டு மாடு தாக்கி மூதாட்டி உயிரிழப்பு!

ராஜபாளையம் அருகே காட்டு மாடு தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
07:51 PM Feb 21, 2025 IST | Web Editor
காட்டு மாடு தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
Advertisement

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள தோப்பு
காளியம்மன் கோயில் அருகே, ராம் சிங் என்பவருக்கு சொந்தமான விவசாய காடு
உள்ளது. இக்காட்டில் மா, பலா, தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இங்கு கணபதி சுந்தரநாச்சியாபுரம் கிராமம், காலனித் தெருவை சார்ந்த 68 வயது மூதாட்டி சுந்தராம்மாள் என்பவர், அவரது 20 வயது மகன் அலெக்ஸ் பாண்டியன் உடன் கூலி வேலை பார்த்து வருகிறார்.

Advertisement

இந்த நிலையில் இன்று சுந்தராம்பாள் அவரது மகன் அலெக்ஸ் பாண்டியனுடன்
மாடுகளுக்கு புல் அறுக்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். அருக்கப்பட்ட புல்லினை சுந்தரம்பாளின் மகன் சேகரித்து மாட்டு தொழுவத்தில்
வைத்துவிட்டு திரும்ப வந்துள்ளார். அப்போது தாய் சுந்தராம்மாள் காட்டு மாடு
தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, பக்கத்தில் இருந்த விவசாயிகள் உதவியுடன் அவரை மீட்டு தொழுவத்திற்கு அருகே கொண்டு வந்து சேர்த்து பின்னர், வனத்துறையினருக்கும்
காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement