For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“புஜ்ஜி வாகனத்தை எலான் மஸ்க் இயக்க வேண்டும்” - கல்கி இயக்குநர் வேண்டுகோள்!

10:03 PM May 29, 2024 IST | Web Editor
“புஜ்ஜி வாகனத்தை எலான் மஸ்க் இயக்க வேண்டும்”   கல்கி இயக்குநர் வேண்டுகோள்
Advertisement

கல்கி திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘புஜ்ஜி’ வாகனத்தை எலான் மஸ்க் இயக்க வேண்டும் என அப்படத்தின் இயக்குநர் நாக் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

Advertisement

எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ், போரிங் கம்பெனி என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டார். இவர் டெஸ்லா கார்கள் வெளியான சில நாள்களிலேயே டெஸ்லாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெருமையை மீண்டும் பெற்றார்.

பின்னர், ட்விட்டர் நிறுவனத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதால் தனது முதல் இடத்தை மஸ்க் இழந்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் எலான் மஸ்க் தான் விட்ட இடத்தை மீண்டும் கைப்பற்றினார். இந்த ஆண்டு வரை அதனை தக்கவும் வைத்துக்கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வரவிருந்த நிலையில் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். ரூ.600 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

முன்னதாக ‘கல்கி 2898 ஏடி' படத்தில் நடிகர் பிரபாஸின் பெயர் பைரவா எனக் குறிப்பிட்டு படக்குழு போஸ்டரை வெளியிட்டதுடன் இப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரோபோ கதாபாத்திரமான புஜ்ஜியின் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. புஜ்ஜிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். ரோபோவுடன் நடிகர் பிரபாஸ் நடத்தும் உரையாடல்கள் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் கல்கி இயக்குநர் நாக் அஷ்வின், “டியர் எலான் மஸ்க் சார், எங்களது புஜ்ஜி எனும் வாகனத்தை நீங்கள் பார்க்க வேண்டும் மற்றும் இயக்க வேண்டும் என நாங்கள் உங்களை அழைக்கிறோம். இது 6 டன் பீஸ்ட். முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. முழுவதும் எலக்ட்ரிக், எஞ்ஜினியரிங்கின் உதவியால் உருவாக்கப்பட்டது. இது உங்களது சைபர் ட்ரக் உடன் சிறந்த புகைப்படமாக இருக்கும் என்பதை நிச்சயமாக சொல்லுவேன். நாம் இருவரும் இணைந்து இதனை இயக்க வேண்டுமென நினைக்கிறேன்” இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.

Tags :
Advertisement