“படித்தவன் புத்திசாலியும் இல்லை... படிக்காதவன் முட்டாளும் இல்லை!” - நடிகர் பிரசாந்த்!
“படித்தவன் எல்லாம் புத்திசாலியும் இல்லை. படிக்காதவன் எல்லாம் முட்டாளும்
இல்லை” என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் பள்ளி சார்பில்,
பள்ளிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரசாத், நடிகை வித்யுலேகா ராமன், நியூஸ்7 தமிழ் மேலான் இயக்குநர் வேல்முருகன், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜபதாஸ் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்த் பேசியதாவது:
படித்தவன் எல்லாம் புத்திசாலியும் இல்லை, படிக்காதவன் எல்லாம் முட்டாளும்
இல்லை. எப்போதும் படித்துக் கொண்டே இருக்க கூடாது. ஆனால் ஒன்று, தேவையான நேரத்தில் கட்டாயம் படிக்க வேண்டும். பள்ளி படிப்பின் போது நான் கணிதத்தில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தேன். இன்று மாணவர்களாகிய நீங்கள் எல்லாம் பாக்கியசாலிகளாக உள்ளீர்கள். உங்கள் கையில் மொபைல் போன் உள்ளது. அதை வைத்து நீங்கள் எந்த தகவல் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்களாகிய உங்களுடைய வெற்றியும், தோல்வியும் உங்கள் கையில் தான் உள்ளது.
உங்களுடைய எதிர்காலத்திற்கு பொறுப்பு நீங்களே. பள்ளி, கல்லூரி பருவம் போல இனிமையான பருவம் வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை.
அந்தகன் வெற்றியை தொடர்ந்து வருடத்திற்கு இரண்டு படங்கள் எதிர்பார்க்கலாமா? என
செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “வருடத்திற்கு 4 படம் பிளான் பண்ணி
இருக்கேன். என்ன பிளான். பிளான் பண்ணாலும் மேல கடவுள் இருக்கான்” என தெரிவித்தார்.
தொடர்ந்து எந்த இயக்குநருடன் நடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, “தனிப்பட்ட
இயக்குநர் என்று யாருமில்லை. அனைத்து இயக்குநருடனும் பணியாற்ற
வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கதைகளும் கேட்டு கொண்டிருக்கிறேன்.
கோட் திரைப்படம் எப்படி வந்துள்ளது என்ற கேள்விக்கு, குடும்பங்கள் கொண்டாடும்
வகையில் வந்துள்ளது. விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு, அனைவருமே தன் வாழ்க்கையில் நாட்டிற்காக, சமூகத்திற்காக ஏதாவது பண்ண வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி வரும் பொழுது அதனை வரவேற்க வேண்டும்.
விஜய்க்கு de aging பண்ணியது போல் உங்களுக்கும் இருக்கா என்ற கேள்விக்கு,
“அப்படியா இன்னும் இரண்டு வாரம் தானே பார்த்துருவோம். இதே பள்ளியில் படித்ததால், ஆசிரியர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆசிரியர்கள் திட்டும் போது வருத்தமாக இருக்கும். ஆனால் ஆசிரியர்கள் திட்டுவது நாம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக தான். எனவே ஆசிரியர்கள் சொல்லுவதை கேட்டுக்கொள்ள வேண்டும்” இவ்வாறு நடிகர் பிரசாந்த் தெரிவித்தார்.