Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எடப்பாடி பழனிசாமியின் 23ஆம் தேதி சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு!

எடப்பாடி பழனிசாமியின் ஆகஸ்ட் 23ஆம் தேதி சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
05:46 PM Aug 11, 2025 IST | Web Editor
எடப்பாடி பழனிசாமியின் ஆகஸ்ட் 23ஆம் தேதி சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisement

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றப்பயணத்தில் அவர் தமிழகத்தில் உள்ள உழவர்கள், நெசவாளர்கள் என பல்வேறு தரப்பினரையும் நிலையில் சந்தித்து வருகிறார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் 23.8.2025 நாள் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisement

” அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி K. பழனிசாமி , 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், 23.8.2025 வரை தொடர் பிரச்சாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த, மூன்றாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 23.8.2025 - சனிக் கிழமை அன்று சோழிங்கநல்லூர், திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
23rdagustADMKEPSlatestNewsTNnews
Advertisement
Next Article