"எடப்பாடி பழனிச்சாமி மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்" - அமைச்சர் சிவசங்கர்!
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையின் சார்பில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று கொடுமைப் பொருள்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதல்வர் என்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் இல்லத்திற்கே சென்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் முன்னிலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, உள்ளிட்ட கொடுமைப் பொருள்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், "விவசாயிகளுக்கு தடை இல்லாத மின்சாரம் வழங்குவதற்கான சுழலை திமுக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை திமுக முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் கொண்டு வந்தார். விவசாயிகளுக்கு என்ன தேவையோ அதை திமுக அரசு செய்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்.
விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்து கேட்டபோது, கடந்த ஆட்சி காலத்தை விட தற்போது திமுக ஆட்சி காலத்தில்தான் 2 லட்சம் விவசாயிகளுக்கு மேல் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும், காத்திருப்போர் பட்டியலின்படி விவசாயிகளுக்கு மின்னணிப்புகள் வழங்கப்படும்.
போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் நிற்பதற்கான அறிக்கை வெளியிட்ட நிலையில் அதற்கான பணிகள் நிறைவு பெறாமல் இருப்பது குறித்து கேட்டபோது, தற்போது 3200 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றுள்ளது இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் பணிவான வழங்கப்படும் அதுவரை இயக்குவதற்காக அவுட்சோர்சிங் முறையில் பணியாட்கள் மூலம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
நிரந்தர பணியாற்ற கல் அமர்த்தியபின் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். போக்குவரத்து தொழிலாளரின் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து கேட்டபோது இதுவரை தமிழகத்திலே இல்லாதவரை தற்போது திமுக ஆட்சியர் காலத்தில் தான் இரண்டு முறை பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முன்பு 5 சதவீத ஊதிய உயர்வும், தற்போது ஆறு சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை முடிவு வராமல் தேர்தல் நேரத்தில் இடைக்கால நிதியை அறிவித்துவிட்டு சென்றனர். தற்போது திமுக ஆட்சியில் தான் ஊதிய உயர்வு வழங்கி உள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியை அழைக்கிறது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மற்றும் கூட்டுறவுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.