For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போல் காட்டிக்கொள்கிறார்" - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வெற்றி அடைந்ததால் எடப்பாடி பழனிசாமியால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11:24 AM Aug 11, 2025 IST | Web Editor
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வெற்றி அடைந்ததால் எடப்பாடி பழனிசாமியால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர்  ஜெயலலிதா போல் காட்டிக்கொள்கிறார்    மு க ஸ்டாலின் விமர்சனம்
Advertisement

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் உள்ள நேதாஜி மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த போது வழியில் ரோடு ஷோ நடத்தினர். அப்போது சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேதாஜி மைதானத்தில் 949 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், 182 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 35 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர மூர்த்தி, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரயான், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

"இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம், சுற்றியிருக்கும் மாவட்டத்திற்கு சர்க்கரையை அள்ளிதரும் மாவட்டம் இந்த திருப்பூர் மாவட்டம். கலைஞர் அமைச்சரவையிலும், தற்போது திராவிட மாடல் அமைச்சரைவையிலும் எந்த ஒரு வேலை கொடுத்தாலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக முடிப்பவர் மு.பெ.சாமிநாதன்.

திருப்பூருக்கு கடந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற பல்வேறு திட்டங்களை இந்த திராவிட மாடல் அரசு செய்துள்ளது. தாராபுரம் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனை போல தர உயர்த்த இருக்கிறோம். 10491 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் மாவட்டத்திற்க்கு எண்ணற்ற திட்டங்களை 4 ஆண்டுகளில் கொடுத்துள்ளோம். ஆனால் திருப்பூருக்கு அதிமுக அரசு எதுவே செய்யவில்லை.

அத்திகடவு அவினாசி திட்டத்திற்கு மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் குரல் கொடுத்து தற்போது நிறைவேற்றியது திராவிட மாடல் ஆட்சி தான். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கிய முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிச்சாமி கவுண்டர், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி மகாலிங்கம், ஆகியோர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு அரங்கத்தை தற்போது திறக்க இருக்கிறோம்.

பாரம்பிகுளம் ஆழியாறு திட்டம் மற்றும் ஆனைமலை நல்லாறு திட்டத்தை கேரளா அரசுடன் பேசி விவசாயிகளில் நீண்ட நாள் கோரிக்கைதை விரைவில் இந்த திட்டம் நிறைவேற்றுவோம், பரம்பிகுளத்திலிருந்து வரும் கால்வாயை 10 கோடியில் தூர்வாரப்படும். 9 கோடி செலவில் திருப்பூரில் மாவட்ட மையம் நூலகம் அமைக்கப்படும். காங்கேயத்தில் 11 கோடியில் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். தாராபுரம் வேளான் பெருமக்கள் பயன்பெரும் வகையில் உப்பாற்றி குறுக்கே 7 தடுப்பணை கட்டப்படும்.

ஊத்துகுளியில் 6 கோடி மதிப்பீட்டில் வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும். விவசாயிகளில் கோரிக்கையை ஏற்று அமராவதி சர்க்கரை ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வல்லுனர் குழு அமைத்து அதை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்
இந்த பகுதிக்கு வந்தால் மட்டும் தன்னை மேற்கு மண்டல தலைவர் போல காட்டி கொள்கிறார்.எடப்பாடி பழனிச்சாமி.

எந்த தைரியத்தில் மேற்கு மண்டலத்திலிருந்து பிரச்சராம் துவங்கினார் என்று தெரியிவில்லை. அவரது தோல்வி இங்கிருந்து தான் துவங்க போகுது. சுந்தராடிராவல்ஸ் வண்டியில் கத்தி கத்தி பேசி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வெற்றி அடைந்ததால் அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் பெயர் வைத்து குறித்து நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்க நினைத்து தற்போது நீதிமன்றத்திற்கு 10 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார் சி.வி.சண்முகம்.

எடப்பாடி பழனிச்சாமி, தொடர்ந்து அடிமேல் அடி வாங்குகிறார். விரக்தியின் விழிம்பில் பேசிகொண்டு என்னை ஒருமையில் பேசி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. எதோ தன்னை எம்.ஜி.ஆர் போலவும், ஜெயலலிதா போலவும் காட்டி கொண்டிருக்கிறார். அவரது வண்டி விரைவில் கலண்டு விழும். யாரை பற்றியும் கவலை கொள்ளாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 295 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் 19785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Tags :
Advertisement