Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#ECI | மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல்? அறிவிப்பை இன்று வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்!

10:15 AM Oct 15, 2024 IST | Web Editor
Advertisement

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவுள்ளது.

Advertisement

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அதற்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது அவசியம். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் மொத்தம் 288 தொகுதிகளும், ஜார்கண்ட் சட்டப்பேரவையில் மொத்தம் 81 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தை சிவசேனை (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி செய்து வருகின்றது. அதேபோல், ஜார்கண்ட் மாநிலத்தை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகின்றது.

இந்நிலையில், இன்று டெல்லியில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை வெளியிடுகிறார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதில், ஜம்மு - காஷ்மீரில் இந்தியா கூட்டணியும், ஹரியாணாவில் பாஜகவும் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
assembly electionELECTION COMMISSION OF INDIAElection DateJharkhandMaharashtraNews7TamilRajiv Kumar
Advertisement
Next Article