For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வாக்கு எண்ணிக்கை எதிரொலி : பங்குச்சந்தை கடும் சரிவு!

11:15 AM Jun 04, 2024 IST | Web Editor
வாக்கு எண்ணிக்கை எதிரொலி   பங்குச்சந்தை கடும் சரிவு
Advertisement

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளையொட்டி பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டு வருகிறது.

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.   முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்ததாக வாக்கு இயந்திரத்தில் பதிவாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

ஆரம்பத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்தது. இந்நிலையில், முடிவுகள் குறித்து நிலையான ஊகத்திற்கு வர முடியாததால், தேசிய பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

இதையும் படியுங்கள் : டி20 உலக கோப்பை : 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி!

இறக்கத்துடன் துவங்கிய இன்றைய பங்குச்சந்தை சென்செக்ஸில் 2303.45 புள்ளிகளை இழந்து 74275.46 இறக்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல், நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து 22633.12-ல் தடுமாறி வருகிறது. மேலும், இன்றைய பங்குச்சந்தை முடிவில் 3000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement