SEBI நோட்டீஸ் எதிரொலி! ஒரே நாளில் 9% சரிந்த #Paytm பங்குகள்!!
Paytm நிறுவனர் விஜய் சேகர் சர்மாவிடம் விளக்கம் கேட்டு செபி நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் 9% சரிவைக் சந்தித்தன.
இந்தியாவில் செயல்படுகிற பேமெண்ட் சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவுக்கு, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி விதிமுறைகளை மீறியதற்காக ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியது. இந்த தகவல்கள் இணைய தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வெகுவாக சரிந்தது.
பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா மற்றும் 2021 நவம்பரில் நடந்த அதன் ஐபிஓ-வுக்கு பொறுப்பான இயக்குநர்களுக்கு, தவறான தகவல் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் செபி நோட்டீஸ் அனுப்பியது. ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியை ஆய்வு செய்தது, இதன் மூலம் கிடைத்த தகவல் படி எழுந்த குற்றச்சாட்டு வைத்துத்தான் செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில்தான் இன்று தொடங்கிய பங்குச் சந்தையில் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மாவின் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மும்பை பங்குச்சந்தையில் 9% குறைந்து ரூ.505.25க்கு வந்துள்ளது.