Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#earthquake | தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவு!

10:14 AM Aug 16, 2024 IST | Web Editor
Advertisement

தாய்வானின் கிழக்கு பகுதியிலும்,  ஆப்கானிஸ்தானிலும்  நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

நிலநடுக்கம் ஏற்பட்டதை அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. தாய்வானில் ஒரே நாளில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். இதில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கம் காரணமாக தலைநகர் தைபேவில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியிலிருந்து 9.7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கம் அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் இது தொடர்பாக மக்களு க்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கை ஆகிவிட்டது.

அதேபோல் ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்து குஷ் மலைப்பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவாகியுள்ளது.  நள்ளிரவு 1.06 மணிக்கு பூமிக்கு அடியில் 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
earthquakeTaiwan
Advertisement
Next Article