பாகிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இன்று அதிகாலை 1.44 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் 34.59 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.91 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும், 22 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளது.
மேலும், இதுபோன்ற ஆழமற்ற நிலநடுக்கங்கள் நிலபரப்புக்கு மிக அருகில் ஏற்படுவதால், அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.