நியூயார்க் நகரில் திடீர் நில அதிர்வு: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
அமெரிக்காவின் நியூயார்க், பிலடெல்பியா நகரங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க், பிலடெல்பியா நகரங்களில் நிலஅதிர்வு ஏற்பட்டு அங்கு இருக்கும் கட்டடங்களை குலுங்கின. இப்பகுதிகளில் லட்சக்கணக்கானோர் நிலஅதிர்வை உணர்ந்திருந்தனர். இது 4.8 என்ற அளவுக்கு ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை – கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!
பால்டிமோர் முதல் பாஸ்டன் மற்றும் அதற்கு தொலைவில் உள்ள நகரங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க்கில் சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டதால், பாதுகாப்புக் கருதி அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, சேதங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த நிலஅதிர்வு காரணமாக சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திசைதிருப்பப்பட்டதுடன், சில விமானங்கள் தாமதமாக தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. நிலஅதிர்வு உணரப்பட்டதைத் தொடர்ந்து பயணிகள் ரயில் சேவை, முன்னெச்சரிக்கையாக சேவை நிறுத்தப்பட்டது.